எங்களின் கொள்கைகள்

சுதந்திரம் பாரபட்சம் இல்லை குறுக்கீடு செய்யாமை எல்லைக்குட்பட்ட அரசாங்கம் பரவலாக்கம் சரியான நேரத்தில் நீதி வழங்குதல் மக்களின் பொருளாதார வளர்ச்சி

இன்னும் படிக்க

ப்ரீமரீஸ் மேடை

புதிய அரசியல் மற்றும் அரசமைப்பு. தேர்தலில் நிற்கக்கூடிய வேட்பாளர்களை அனைத்து மட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்க முடியும்.

இன்னும் படிக்க

இந்த தருணத்திலயே இணையுங்கள்

நயி த்தீஷா அமைப்பு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நயி த்தீஷா அமைப்பு என்றால் என்ன? அதற்கு பின்னால் உறுதுணையாக இருப்பவர்கள் யாவர்? அவர்களின் செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் என்னென்ன?

நயி த்தீஷா இந்தியர்களுக்கு வளமான வாழ்வை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் களம். இதன் முக்கிய நோக்கம் நமது அரசியல் அமைப்பில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வந்து நம் நாட்டை செழிப்பான வழியில் நடத்திச் செல்வதே ஆகும். அரசியல் மற்றும் ஒரு பொருளாதார மாற்றத்தை உண்டாக்கி பல மில்லியன் மக்களுக்கு உரித்தான வாழ்வை அளிக்க முடியும் என்பது இதன் நம்பிக்கையாக உள்ளது. மேலும் விவரங்களுக்கு manifesto and statement of purpose.

நயி த்தீஷா தான் முதன் முதலில் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையதள அமைப்பு. மக்களாகிய நீங்கள் நினைத்ததை, உங்கள் கனவை, உங்கள் திட்டங்கள் மற்றும் உங்கள் நோக்கத்தை கொண்டு செயல்பட்டு அதன் மூலம் இந்திய நாட்டை முன்னேற்ற பாதைக்கு வழி நடத்திச் செல்லும் தளமாகும். எங்கள் தளத்தை பற்றிய விரிவான விவரங்களை அறிய இங்கே செல்லவும் here.

நாங்கள் எந்த ஒரு அரசியல் தலைவரையும் அமைப்பின் தேர்தல் வேட்பாளராக தேர்ந்தெடுப்பதில்லை. உங்களில் ஒருவர், உங்களின் நம்பிக்கைக்கும் விருப்பத்திற்கும் பாத்திரமான ஒரு நபரையே அமைப்பின் வேட்பாளராக தேர்ந்தெடுப்போம்.

நயி த்தீஷா ராஜேஷ் ஜெயின் Rajesh Jain, என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் தான் நமது ஆசிய டாட்காம் புரட்சியில் முன்னோடியாக திகழ்ந்தவர். எமது அமைப்பில் மக்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள், வக்கீல்கள், விவசாயிகள், பொருளாதாரவாதிகள் மற்றும் இளைய தலைமுறையினர் இப்படி யார் வேண்டுமானாலும் உறுப்பினர்கள் ஆகலாம்.

நிறைய கேள்விகளுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பகுதிக்கு செல்லுங்கள்

நயி த்தீஷா அமைப்பின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள் எவை?

வறுமை என்பது ஒன்றும் இந்தியாவின் தலைவிதி கிடையாது. எங்களது பார்வை நீண்ட இலட்சியங்களை நோக்கியது அல்ல. குறுகிய காலத்தில் நடக்க வேண்டிய முக்கியமான இலட்சியங்களை நோக்கியது. ஆம் இரண்டு தேர்தல்களிலே நம் நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவைகள் நூற்றாண்டுக்கு தள்ளிப் போடும் விஷயங்கள் அல்ல. இப்ப இப்பவே அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டிய நேரம்.

நயி த்தீஷா 543 குறிக்கோள் படி மக்கள் வளமான வாழ்க்கை பெற எல்லா வசதிகளும் அளிக்கப்படும். நாட்டை செழிப்பான வழியில் நடத்துவதே இதன் முதல் குறிக்கோள். 2019 ல் நடக்க இருக்கும் தேர்தலில் 543 அளவிலான பொரும்பாலான இடங்களை பெற்று ஆட்சியமைத்து மக்களுக்கு நல்லாட்சி புரிவதே எங்கள் டிஜிட்டல் சேவையின் முதன்மையான நோக்கமாகும். பராம்பரிய அரசியல் கட்சிகளை மாற்றி புதிய அரசியல் களத்துடன் நாட்டை வளமாக்கும் செயலில் ஈடுபடுவதே எங்களின் குறிக்கோள்.

எங்களின் கொள்கைகள் பின்வருமாறு:
1. சுதந்திரம்
2. பரவலாக்கம்
3. கட்டுபாட்டுடனான அரசாங்கம்
4. பாரபட்சம் இல்லை
5. தலையிடாமை
6. மக்களின் பொருளாதார வளர்ச்சி
7. சரியான நேரத்தில் நீதி வழங்குதல்

எங்கள் தளத்தை பற்றிய அதிகமான விவரங்களையும் அறிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ள படியுங்கள்

நயி த்தீஷா எப்படி இந்தியர்களின் வாழ்வை செழிப்பாக்கும்?

நயி த்தீஷா இரண்டு தீர்வுகளை உங்களுக்காக கூறுகிறது. ஓவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் வருடம் 1 லட்ச ரூபாயை வழங்க வேண்டும். மக்களிடம் இருந்து வாங்கப்படும் வரியில் 10 % அதாவது 1.5 லட்சம் தொகையை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்க வேண்டும்.

வரி என்பது இந்தியாவில் கிடையாது. ஜிஎஸ்டி என்ற பெயரில் கொள்ளை தான் அடிக்கப்படுகிறது. இப்படியே அரசாங்கம் செய்து வந்தால் மக்களால் தொழில் தொடங்க முடியாத நிலை உருவாகி விடும். தொழிலில் முன்னேற்றமில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் எங்கே முன்னேறும். எனவே மக்களின் மீதான வரி விதிப்பை குறைத்து தொழில் தொடங்க மக்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும். இதனால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு கூட தொழில் தொடங்குவதற்கான ஆதாரம் கிடைக்கும். மேலும் இந்தியாவின் வளங்கள் அனைத்தும் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் உரிமையானது.அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசாங்கம் அவற்றில் இருந்து வரும் தொகையில் சராசரி ஒரு லட்சம் ரூபாயை இந்திய குடும்பத்திற்கு வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் தொழில், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இவற்றை மேம்படுத்த இயலும். மக்களின் பொருளாதார முன்னேற்றமே நாட்டின் வளமாக வளர்ந்து நிற்கும்.

Read more about our vision.

நயி த்தீஷா அமைப்பின் நிர்வாக கட்டமைப்பு என்ன?

நயி த்தீஷா அமைப்பின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு இந்தியர்களின் வாழ்வை செழிப்பான பாதைக்கு மாற்ற வேண்டும். அதே நேரத்தில் அரசியல் கட்டமைப்பில் ஒட்டு மொத்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் தலைசிறந்த கடமையாகும். எனவே எங்களது குறிக்கோள்களுக்கு ஆதரவு தந்து இந்தியாவை செழிப்பான வழியில் நடத்திச் செல்ல நீங்களும் இன்றே நயி த்தீஷா உறுப்பினர்களாக இணையுங்கள்.

Be a part of our vision, join Nayi Disha.

நயி த்தீஷாவின் ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் வழங்கும் திட்டம் இந்தியர்களின் வாழ்வை செழிப்பாக்குமா?

ஆம். நமது நாட்டில் சுமார் 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களின் வருடாந்திர வருமானம் சுமார் 1.2 லட்சம் மட்டும் தான். இதுவே அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கினால் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு தொழில் தொடங்க ஆதாரம் கிடைக்கும்.

மேலும் நயி த்தீஷா அமைப்பு மக்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் முனைவது, சிறு மற்றும் தொழில் தொடங்க வாய்ப்புகளை அள்ளித் தருவது போன்றவற்றையும் செயல்படுத்த உள்ளது. இதனால் பாமர மக்கள் கூட தொழில் வளர்ச்சி பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். மக்களின் முன்னேற்றமே நாட்டின் வளமாக வளர்ந்து நிற்கும்.

மோடி போன்ற அரசியல் தலைவர்களை போலவே தேர்தல் வாக்குகளை தெளிக்கும் இந்த நயி த்தீஷா அமைப்பை நாங்கள் எப்படி நம்புவது?

தற்போதைய அரசியல் கட்சிகளால் ஏமாற்றப்பட்டு, பரிக்கப்பட்டு இருக்கும் வளங்கள் அனைத்தும் இந்திய மக்களை சென்றடையும் என்பதை நாங்கள் உறுதியுடன் கூறிக் கொள்கிறோம். வெற்றியை தன்வசமாக்கிய தொழிலதிபர் ராஜேஷ் ஜெயின் நிச்சயமாக இந்திய மக்களின் வளமான வாழ்க்கைக்கான வெற்றியையும் பெற்று தருவார் . இந்திய மக்களின் வளமான வாழ்க்கைக்கான அறிக்கை, தீர்மானங்கள் மற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றும் நயி த்தீஷா உறுப்பினர்களால் ஆராய்ந்து உருவாக்கப்பட்ட செயல் திட்டங்கள் ஆகும். எனவே நாங்கள் வெறும் வாக்குறுதிகளை காற்றிலே பரக்க விடுபவர்கள் அல்ல. எங்களது வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்தக் கூடிய மக்களுக்கும் இந்நாட்டிற்கும் பலனளிக்கக்கூடிய வாக்குறுதிகள்.

நயி த்தீஷாவின் ஊக்கப்படுத்தும் கருத்துகளை இன்னும் அறிந்து கொள்ள படியுங்கள்

கனிம மற்றும் நில ஆதாரங்களை ஏலத்தில் இருந்து யார் வாங்குவது? மத்திய அரசாங்கத்திடமிருந்து அதை பெறுவது சுலபமான ஒன்றா? அயல்நாட்டவர்களும் இதில் பங்கு கொள்வார்களா?

நமது மத்திய அரசாங்கம் எந்தவொரு கனிம வளங்களையும் விளை நிலங்களையும் இலவசமாக தொழிற்சாலைகளுக்கு வழங்குவதில்லை. நம் நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் இந்திய மக்களாகிய நமக்கு மட்டுமே சொந்தம். ஆனால் நமது அரசாங்கம் அவற்றை நம்மிடமிருந்து பறித்து தொழிற்சாலை முதலாளிகளுக்கு அதிகமான பணத்திற்கு விற்று விடுகிறது. மக்களும் ஏலத்தில் அதன் மீதான விதிமுறைகள், சட்டங்கள் போன்ற பிரச்சினைகளால் கனிம வளங்களை வாங்குவதில்லை. முடிவில் மக்களாகிய நாம் தொழில் தொடங்கும் போது கனிம வளங்களுக்காக தொழிற்சாலையிடம் கையேந்தி அதிகமான பணத்தை கொடுத்து அவற்றை பெற வேண்டியிருக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால் நம் தாய்நாட்டு வளங்களின் மதிப்பை அயல்நாட்டு கம்பெனிகள் நிர்ணயிப்பது தான். இந்திய குடிமக்களாகிய நாமும் அயல்நாட்டவர்களும் ஒன்று போல் தான் இந்த அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றோம். நமது தாய்நாட்டின் சொத்தையே நம்மிடமிருந்து பிடுங்கி நமக்கே அதிகமான விலைக்கு விற்கும் ஏமாற்றம் இங்கு மட்டும் தான் நடந்து வருகிறது. எனவே மக்களே உங்கள் நாட்டின் இயற்கை வளங்களை உங்களிடமே கொண்டு வந்து சேர்ப்பது தான் எங்கள் அமைப்பின் குறிக்கோள். இயற்கை வளங்களை காப்போம். நம் நாட்டின் செழிப்பை உயர்த்துவோம்.

மக்களின் எதிர்கால வளமைக்கு நயி த்தீஷா என்ன செய்யப் போகிறது?

இந்தியாவின் பொது வளங்களை கொண்டு சுமார் 50 வருடங்களுக்கு வருடாந்திரமாக 1 லட்சம் ரூபாயை ஒவ்வொரு இந்திய குடும்பங்களுக்கும் வழங்க முடியும். இதன் மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு தொழில் தொடங்க முயலுவார்கள் . இந்த முன்னேற்றமே நமது இந்தியாவை செழிப்பான பாதைக்கு முன்னேற்றி செல்லும்.

ஏழை மக்களுக்கு நயி த்தீஷா தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க உதவுமா?

நயி த்தீஷா அமைப்பு இந்திய பொது வளங்கள் மூலம் ஒவ்வொரு இந்திய குடும்பங்களுக்கும் வழங்கும் வருடாந்திர ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு ஏழைகளுக்கு பெரிதும் பயன்படும். இதனால் அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை அவர்களே ஏற்படுத்தி கொள்ள முடியும். வாய்ப்புகள் கிடைக்காமல் தவிப்பதும் , பொருளாதார பின்னடைவும், சமூக பின்னடைவு இவைகள் தான் ஏழ்மைக்கு முக்கிய காரணங்களாக அமைகிறது.

இந்திய இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை தருகிறது. அவர்களின் இந்த பொருளாதார வாய்ப்பே அவர்களுக்கு புதிய தொழில் தொடங்க உதவும்.

Read more about our vision.

நயி த்தீஷா அமைப்பு அரசியல் கட்சிகளால் பதவி செய்யப்பட்டதா? அப்படி இல்லையென்றால் எப்படி நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவார்கள்?

நயி த்தீஷா அமைப்பு எந்த ஒரு அரசியல் கட்சிகளாலும் பதவி செய்யப்பட்டது கிடையாது. இவை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு இணையதள அமைப்பு. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்தியாவை செழிப்பான திசைக்கு எடுத்துச் செல்வதே எங்களது குறிக்கோள். நயி த்தீஷா அமைப்புக்கு என்று எந்தவொரு கட்சி அடையாளமும் கிடையாது.

எங்கள் பார்வைக்கு ஒரு பகுதியாக இருங்கள்

நயி த்தீஷா அரசியல் களத்திற்காக நான் என்ன செய்ய வேண்டும்?

நயி த்தீஷா அமைப்பின் வழியாக நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் :

a. போட்டியிடும் வேட்பாளகளுக்கு உங்கள் ஆதரவையும் வாக்குகளையும் கொடுத்து வெற்றி பெற உதவ வேண்டும்.
b. தேர்தல் வேட்பாளர்களின் செயல்களையும் நடவடிக்கைகளையும் ஆராயலாம்
c. உங்கள் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் மற்றும் பிரச்சினைகளையும் கலந்துரையாடலாம்
d. உங்கள் பகுதியில் உள்ள மற்ற நயி த்தீஷா உறுப்பினர்களை பற்றி அறிந்து கொண்டு தொடர்பு கொள்ளலாம்.
e. தன்னார்வலர்களாக இந்த அமைப்பிற்கு உங்கள் சேவையை புரியலாம்:

 • புதிய உறுப்பினராகவும் பங்கு கொண்டு எங்கள் இலக்குகளையும் கொள்கைகளையும் மக்களிடையே பரப்பலாம்.
 • உங்கள் தெருவில் அல்லது பகுதிகளில் அரசியல் மாற்றத்தை பற்றிய ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்படுத்தலாம்.
 • ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எங்கள் அமைப்பை பற்றி கூறி ஒரு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
 • புதிய வாக்காளராக பதிவு செய்யலாம்
 • மக்களின் நலன் காக்கும் திட்டங்களை சேகரித்து கூறலாம்
 • நிதி திரட்ட உதவலாம்
 • உங்கள் பகுதியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடலாம்
 • தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் ஆதரவை பெற உதவலாம்
 • எங்கள் தளத்தை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள படியுங்கள்

  நயி த்தீஷா அமைப்பில் தேர்தல் வேட்பாளராக நிற்க வயது வரம்பு இருக்கா?

  ஆம். நயி த்தீஷா அமைப்பில் உறுப்பினராக சேர கண்டிப்பாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக நிற்க குறைந்தது 25 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

  எங்கள் முதன்மை தேர்தலை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள படியுங்கள்

  உங்கள் அமைப்பு தேர்தலின் போது ஆட்சியமைக்க வாக்குகள் தேவைப்பட்டால் பா. ஜ. க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற எதாவது கட்சிகளுடன் கூட்டணி வைப்பீர்களா?

  இந்த அமைப்பு எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தது இல்லை. இது மக்களின் வளர்ச்சிக்காகவும் தற்போதுள்ள அரசியல் மாற்றத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு தனி அமைப்பு. எங்களது பலமே எங்களது உறுப்பினர்கள், நன்மையளிக்கும் வேட்பாளர்கள் மக்களின் ஆதரவு மற்றும் தொழில் நுட்பம் இவற்றை சார்ந்தது மட்டுமே. எனவே கூட்டணி என்ற முறை எங்களிடம் அறவே இல்லை.

  தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் எங்களுடன் இணையுங்கள்

  நீங்கள் ஒரு அரசியல் தளமாகவும் நான் ஒரு வாக்காளராகவும் இருந்து கொண்டு மாற்றத்தை கொண்டு வர முடியுமா. ஓட்டு போடாதவர்களையும், வாக்களிக்க தீர்மானிக்காதவர்களையும் நீங்கள் எப்படி கையாள்வீர்கள்?

  நாம் எல்லாரும் நினைப்பது நம் ஒரு வாக்கால் எதையும் மாற்ற முடியாது என்பதைத் தான். ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இதை ஒவ்வொரு வரும் நினைத்து விட்டால் நிலையே மாறி விடும் அல்லவா. எனவே ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக் கூடிய மிகப் பெரிய ஆயுதம்.

  2014 ல் நடந்த தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் வெறும் 17 கோடிகள் மட்டுமே. ஒட்டுமொத்தமாக 83.4 கோடி வாக்குகளில் 23.7 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த 23.7 கோடி வாக்குகள் பதிவாகி இருந்தால் இன்றைய நிலை மாறியிருக்கும்.

  எனவே உங்களின் ஒவ்வொரு ஓட்டும் மிகவும் முக்கியமானது. நீங்கள் போடாத ஒவ்வொரு வாக்கும் நமது இந்தியாவை அரசியல் சீர்குலைவில் கொண்டு சேர்த்து விடும். உங்களின் ஒவ்வொரு வாக்கும் வளமான இந்தியாவை நோக்கிய ஒரு அடி என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.

  அரசியல் சாக்கடை என்று நினைத்து கொண்டே இருந்தால் அதில் மூழ்கி நாம் தான் செத்து விடுவோம். இனி மேலாவது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயல வேண்டும். அதற்கு நாம் நம்மில் இருக்கும் நல்ல தலைவர்களை கொண்டு அரசியலில் ஈடுபட முயல வேண்டும்.

  இதற்கான ஆதரவை நமது இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். நமது ஒட்டுமொத்த குரலே இந்தியாவின் எழுச்சி குரலாக ஒலிக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது. அதைச் செய்ய இன்றே இந்த நயி த்தீஷா அமைப்பில் இணைந்து உங்கள் எழுச்சி குரலை எழுப்புங்கள்.

  மாற்றத்தில் பங்கு கொள்ள நினைத்தால் நயி த்தீஷாவில் இணையுங்கள்

  அடிப்படை மக்களிடம் இருந்து வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் நீங்கள் உள்ளூர் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்களா?

  நயி த்தீஷா என்பது மக்களின் அமைப்பு. இது ஒரு திறந்த இணையதளம். இங்கே நீங்கள் உங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் சுதந்திரமாக கூறலாம். மற்ற அரசியல் கட்சியை போன்று பராம்பரிய விதிமுறைகள் கிடையாது. உங்கள் பகுதிகளிலே அரசியல் சார்ந்த கலந்துரையாடல், நிகழ்ச்சி போன்றவற்றை நீங்களாகவே ஏற்படுத்தலாம். நயி த்தீஷா உறுப்பினர்களுக்கு தீர்வெடுக்கும் உறுமை போன்றவைகளும் உண்டு.

  எங்கள் தளத்தை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள படியுங்கள்

  மின்னெந்திர வாக்கெடுப்பு முறையிலேயே மோசடி நடக்கும் போது நாங்கள் எப்படி உங்கள் அமைப்பின் வாக்கெடுப்பு முறையை நம்புவது?

  நமது பாரம்பரிய அரசியல் முறையை மாற்றக் கூடியது தான் எங்கள் நயி த்தீஷா அமைப்பு. இது ஒரு திறந்த அமைப்பு என்பதால் எந்த வித மோசடி வாக்கெடுப்பும் நடக்க வாய்ப்பில்லை. மக்களின் முன்னிலையில் நடக்கக் கூடிய வாக்கெடுப்பு முறை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். கடுமையான கவனிப்பு மற்றும் நேர்மையான முறையில் வாக்கெடுப்பு நடைபெறும்.

  கடந்த 70 வருடங்களாக நடக்காத மாற்றம் உங்கள் நயி த்தீஷா அமைப்பால் எப்படி முடியும். மக்களின் அடிப்படை கல்வி, நலம் மற்றும் சட்ட திருத்தங்களை எப்படி மாற்ற போறீர்கள்?

  நமது அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் சுரண்டுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றன. இதுவரை எவரும் இந்தியாவை நல்வழியில் நடத்த முயலவில்லை. மக்கள் அரசாங்கத்தை நம்பியே வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லா அதிகாரங்களும் அரசாங்கத்தின் பிடியில் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட அரசியல் சூழலை மாற்றி இந்தியாவை வளமான பாதையில் கொண்டு செல்வதே நயி த்தீஷா அமைப்பின் நோக்கம். இங்கே அனைவருக்கும் உரிமை உண்டு. நயி த்தீஷா உறுப்பினர்களுக்கு இந்த நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரமும் வழங்கப்படுகிறது.

  நயீ திஷா தன்னுடைய செழிப்பான கொள்கைகள், இதுவரை எந்த அரசாங்கமும் முயற்சிக்காததை நடைமுறைபடுத்தி இந்திய மக்களின் கனவை நனவாக்கப்போகிறோம்.நயி தீஷா ஆதரவாளர் அல்லது தலைவருக்கு அதிகாரம் என்பது ஒரு இலக்கு அல்ல

  அரசாங்கத்தின் சட்ட திருத்தங்களை மாற்றி அவை அனைத்தும் எளிய ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டு வருவதே எங்களின் கடமையாகும். மக்களின் கல்வி மற்றும் நலத்திற்காக நிறைய நன்மைகள் தரும் திட்டங்களை வகுத்தல் மற்றும் மக்களின் பொருளாதாரம் முன்னேற ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் வழங்கும் திட்டம் போன்ற சாத்தியமான திட்டங்களை கொண்டு வருவதே எங்களின் உறுதி மொழி. கடந்த 70 ஆண்டுகளாக யாரும் செய்திராத மாற்றத்தை இந்நாட்டில் விதைத்து இந்தியாவை உலகளவில் முன்னேற்ற பட்டியலில் கொண்டு செல்வதே எங்களின் வெற்றியின் இலக்காக இருக்கும்.

  எங்கள் குறிக்கோள்களை பற்றி இன்னும் அறிந்து கொள்ள படியுங்கள்

  அச்சுறுத்தும் அரசியல் கட்சிகளிடமிருந்து உங்கள் அமைப்பின் வேட்பாளரை காத்து எப்படி எதிர்த்து போட்டியிடுவீர்கள்?

  மக்களின் தீர்ப்பை யாராலும் தடுக்க முடியாது. மக்களின் சக்தி ஒரு மாபெரும் சக்தி. மக்களின் கூட்டு முயற்சிக்கு முன் எந்த அரசியல் கட்சிகளாலும் தங்கள் சக்தியை காண்பிக்க இயலாது. எங்களின் ஓரே குறிக்கோள் நோக்கம் எல்லாம் வளமான இந்தியாவை உருவாக்குவது. வெளியே செயல்படும் சக்திகளை கண்டு அஞ்சாமல் இருக்க மக்களாகிய உங்களின் உறுதுணையும் ஆதரவும் மட்டும் இருந்தால் போதும் வெற்றி நிச்சயமாக எங்கள் வசப்படும்.

  நயி த்தீஷா அமைப்பிற்கு எப்படி நிதியுதவி திரட்டப்படுகிறது?

  நயி த்தீஷா அமைப்பின் ஆரம்ப கால நிதியுதவி ராஜேஷ் ஜெயினால் அளிக்கப்பட்டது. உங்களால் முடிந்த பங்களிப்பையும் நீங்கள் கொடுக்கலாம். இந்த அமைப்பின் நிதி திரட்டுதல் செயல்பாடுகள் அனைத்தும் இணையத்தில் நேரடி தொடர்பில் செயல்படும். இதன்மூலம் நீங்கள் அளித்த நிதிகளின் செயல்பாட்டையும் நேரடியாக உங்களால் அறிந்து கொள்ள முடியும். எந்த தவறான விதத்திலும் நிதியை உபயோகிக்க வாய்ப்பில்லை.

  நயித்திஷாவில் நீங்கள் இணைவது மூலம் எங்களுக்கு உதவிடலாம்.

  நயி த்தீஷாவில் இணைந்துள்ள மக்கள் யாவர்? அவர்களின் சான்றுகள் என்னென்ன?

  நயி த்தீஷா தொழிலதிபர் ராஜேஷ் ஜெயின் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதில் மாணவர்கள், தொழிலதிபர்கள், வக்கீல்கள், விவசாயிகள், இளைய தலைமுறைகள் மற்றும் பொருளாதாரவாதிகள் என்று எல்லாரும் சேர்ந்து செயல்படுகின்றன ஒரு எழுச்சி அமைப்பு. எங்களின் வளர்ச்சிக்கு இன்னும் சேவை புரிபவர்கள், ஆதரவாளர்கள், தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போன்றவர்களும் தேவைப்படுகின்றன. எங்களுடன் நீங்களும் இணைந்து இந்தியாவை வளமான பாதைக்கு எடுத்துச் செல்வோம் என உறுதி மொழி கூறுங்கள்.

  நிறுவனர் ராஜேஷ் ஜெயின் பற்றி இன்னும் அறிய படியுங்கள்

  2014 தேர்தலில் மோடியின் வெற்றிக்கு ராஜேஷ் ஜெயின் காரணமா இல்லையா? அப்படி இருக்கையில் அவர் ஏன் இதை செய்கிறார். தொழிலதிபரான அவரை நான் எப்படி நம்புவது, இந்த அமைப்பு கூட தொழில் நோக்கமான ஒன்றாக இருக்கலாம் அல்லவா?

  ஆம். பிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு தொழிலதிபர் ராஜேஷ் ஜெயின் காரணமாக அமைந்தார். மோடி தலைமையிலான அரசியல் அமைப்பு இந்தியாவை செழிப்பாக்கும் என அவர் நம்பினார். ஆனால் எந்த மாற்றமும் நடக்கவில்லை. மாறாக இந்திய மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது, அதிக வரி வசூலால் தொழில் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. பாமர மக்களின் வாழ்க்கை மேலும் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதையெல்லாம் உணர்ந்த ராஜேஷ் ஜெயின் எல்லா அரசியல் வாதிகளும் கட்சிகளும் பதவியை மட்டுமே காப்பாற்ற போராடுகின்றனர். மக்களை காக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் யாரும் முயல வில்லை என்பதை உணர்ந்த அவர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் இந்த நயி த்தீஷா அமைப்பு. ராஜேஷ் ஜெயின் ஒரு நேர்மையான தொழிலதிபரரும் கூட. தன் கடின உழைப்பை மட்டும் நம்பியே தொழில் தொடங்கியவர். இந்தியாவை எப்படி வளமான பாதைக்கு அழைத்து செல்லுவது என்பதை நன்கு உணர்ந்தவர். இதன் பயனாக பல மில்லியன் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்பது மக்களுக்கு பொருளாதார உதவிகளை அளித்து தொழில் தொடங்க உதவுவது போன்ற எண்ணற்ற திட்டங்களை வகுத்து செயல்பட்டு கொண்டு இருப்பவர். எனவே எங்களின் மீதான உங்கள் நம்பிக்கை தான் எங்களின் குறிக்கோளை அடைய உதவும்.

  இந்தியாவை செழிப்பான பாதையில் கொண்டு போக முயலும் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள். எங்களை நம்புங்கள். அப்போ தான் நம்மால் வெல்ல முடியும். நம் வெற்றியே இந்நாட்டின் வெற்றியாக பிரதிபலிக்கும்.

  ராஜேஷ் ஜெயின் ஒரு நேர்மையான தொழிலதிபரரும் கூட. தன் கடின உழைப்பை மட்டும் நம்பியே தொழில் தொடங்கியவர். இந்தியாவை எப்படி வளமான பாதைக்கு அழைத்து செல்லுவது என்பதை நன்கு உணர்ந்தவர். இதன் பயனாக பல மில்லியன் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்பது மக்களுக்கு பொருளாதார உதவிகளை அளித்து தொழில் தொடங்க உதவுவது போன்ற எண்ணற்ற திட்டங்களை வகுத்து செயல்பட்டு கொண்டு இருப்பவர். எனவே எங்களின் மீதான உங்கள் நம்பிக்கை தான் எங்களின் குறிக்கோளை அடைய உதவும். இந்தியாவை செழிப்பான பாதையில் கொண்டு போக முயலும் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள். எங்களை நம்புங்கள். அப்போ தான் நம்மால் வெல்ல முடியும். நம் வெற்றியே இந்நாட்டின் வெற்றியாக பிரதிபலிக்கும்.

  நயித்தீஷாவுக்காக ரஜேஷ் ஜெயினின் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை படிக்க

  ராஜேஷ் ஜெயின் தேர்தலில் போட்டியிடுவாரா? பிரதமர் ஆவாரா?

  ராஜேஷ் ஜெயினுக்கு எந்த வித அரசியல் ஆசையும் கிடையாது. அப்படி அவர் போட்டியிட்டாலும் நயி த்தீஷாவின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு தான் செயல்பட முடியும். நயி த்தீஷா உறுப்பினர்களால் ஓட்டு போட்டு வெற்றி அடையும் நபரே அரசாங்க தேர்தலில் போட்டியிட முடியும். எனவே வெற்றியும் தோல்வியும் மக்கள் கையில் தான் உள்ளது. இந்த அமைப்பின் மூலம் மக்களுக்கு விருப்பமான ஆதரவான தலைவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும் இருக்கும்.

  ராஜேஷின் அறிக்கை நோக்கங்களை இன்னும் அறிந்து கொள்ள படியுங்கள்

  நயி த்தீஷாவில் நான் ஏன் இணைய வேண்டும்?

  ராஜேஷ் ஜெயினுக்கு எந்த வித அரசியல் ஆசையும் கிடையாது. அப்படி அவர் போட்டியிட்டாலும் நயி த்தீஷாவின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு தான் செயல்பட முடியும். நயி த்தீஷா உறுப்பினர்களால் ஓட்டு போட்டு வெற்றி அடையும் நபரே அரசாங்க தேர்தலில் போட்டியிட முடியும். எனவே வெற்றியும் தோல்வியும் மக்கள் கையில் தான் உள்ளது

  இந்த அமைப்பின் மூலம் மக்களுக்கு விருப்பமான ஆதரவான தலைவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும் இருக்கும்.

  தன்னார்வலராக எங்கள் லட்சியப் பார்வையில் பங்குகொள்ளுங்கள்

  நயி த்தீஷாவில் நான் ஏன் இணைய வேண்டும்?

  நீங்கள் நிறைய வழிகளில் உங்களின் பங்களிப்பை எங்களுக்கு தரலாம்

 • தற்போதைய அரசியல் சூழலை கண்டு மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைத்தால் இன்றே நயி த்தீஷாவில் உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண் மூலம் இணையுங்கள். மேலும் அரசியல் மாற்றம் பற்றிய உங்கள் கருத்துகளையும் எங்களுடன் பகிரலாம்.
 • எங்களது குறிக்கோள்கள் உங்களுக்கு விருப்பமானதாக நம்பிக்கையானதாக இருந்தால் உங்கள் வாக்காளர் எண் கொண்டு நயி த்தீஷா உறுப்பினர்களாக மாறுங்கள்.
 • எங்களின் அமைப்பிற்கு சேவை செய்ய விருப்பங்கள் இருந்தால் எங்களின் குறிக்கோள்கள் கொள்கைகள் கருத்துக்கள் அனைத்தையும் மக்களிடையே பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்.
 • எங்கள் அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்தியாவை வளமான பாதைக்கு எடுத்துச் செல்ல முயல்பவர்கள். வெற்றியை நோக்கி போரிட தயாரானவர்கள். அவர்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவது வகுப்பது, தலைவர்களை தேர்ந்தெடுப்பது போன்ற அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.

  எங்கள் லட்சிய பார்வையை நம்பினால் நயி த்தீஷாவில் இணையுங்கள்

  நயி த்தீஷா அமைப்பில் இணைய எதற்காக வாக்காளர் அட்டை எண் அளிக்க வேண்டும்? எனது சொந்த விவரங்கள் அனைத்தும் (வாக்காளர் எண், கைபேசி எண் மற்றும் பல) பாதுகாக்கப்படுமா?

  வாக்காளர் எண் என்பது உறுப்பினர்களை தனித்தனியாக கணக்கிட பயன்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இதன் மூலம் வாக்காளர்களை எளிதாக கணக்கிட இயலும். உறுப்பினர்களின் தகவல்கள் விவரங்கள் போன்றவற்றை நயி த்தீஷா அமைப்பில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

  உங்களது சொந்த விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பான சூழலில் கையாளப்படும். எந்த வித தவறான செயல்பாடுகளும் நடக்க வாய்ப்பில்லை. உங்கள் அனைத்து தகவல்களும் பாதுகாக்கப்படும்.

  எங்கள் தளத்தை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள படியுங்கள்

  இப்போது எங்களை சேருங்கள்

  நான் எனது வாக்காளர் எண் அளிக்காமல் நயி த்தீஷா அமைப்பில் இணைய ஆசைப்படுகிறேன். இது சாத்தியமா?

  ஆம். இது சாத்தியமே. நீங்கள் வாக்காளர் எண் அளித்து உறுப்பினராக இணைய விரும்பவில்லை என்றாலும் நயி த்தீஷாவிற்காக நிறைய வழிகளில் உதவலாம்.

 • a) நயி த்தீஷா பற்றிய விவரங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உதவலாம்.
 • b) தன்னார்வலர்களாக செயல்பட்டு உங்கள் பகுதியில் ஒரு அரசியல் கலந்துரையாடலை நயி த்தீஷா அமைப்பின் சார்பில் ஏற்படுத்தலாம்.
 • நம் நாட்டிற்கு சரியான தகுந்த தலைவரை தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்பினால் உங்கள் வாக்காளர் எண்ணை அளித்து நயி த்தீஷா உறுப்பினராக இணையுங்கள். இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற உங்கள் வாக்குகளை நயி த்தீஷா மூலம் அளியுங்கள். உங்கள் வாக்காளர் எண் மற்றும் உங்களை பற்றிய விவரங்களை கூடிய விரைவில் பதிவு செய்து உங்களின் பங்களிப்பையும் இந்நாட்டிற்கு பரிசளியுங்கள். உங்களது அனைத்து தகவல்களும் எங்கள் இணையத்தில் உடனடியாக புதிப்பிக்கப்படும்.

  எங்கள் லட்சியப் பார்வையில் பங்களிக்க நயி த்தீஷாவில் இணையுங்கள்

  நயி த்தீஷா அமைப்பு அதன் உறுப்பினர்களை எப்படி உற்சாகப்படுத்துகிறது?

  நயி த்தீஷா உறுப்பினர்கள் தங்களின் ஆதரவையும் பங்களிப்பையும் நயி த்தீஷா பயன்பாட்டு அமைப்பு, வலைப்பதவுகள், கருக்துக்களம், சமூக ஊடகங்களான முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்றவற்றின் மூலம் அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. நயி த்தீஷா அமைப்பு வளர்ச்சிக்காக பல கலந்துரையாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உங்கள் பகுதிகளில் ஏற்படுத்துகிறது.

  நயி த்தீஷா குழுவில் பங்கு கொள்ள இப்பொழுதே இணையுங்கள்

  மேலதிக விவரங்களுக்குFAQs.

  புதிய செய்திகளுக்கு

  புதிய செய்திகளை உங்கள் வாட்ஸப் நம்பருக்கு பெற

  உங்கள் விருப்பத்திற்கு எங்கள் நன்றி

  குறுஞ்செய்திகள் வழியாக தகவல்களைப் பெற 92239011111 என்ற

  மின்னஞ்சல் மூலமாக புதிய செய்திகளைப் பெற

  உறுதி செய்து கொள்ளுங்கள்

  மின்னஞ்சல் வழியாக புதிய செய்திகளைப் பெற மின்னஞ்சல் வழியாக உங்களுக்கு புதிய செய்திகள் வேண்டாமா?

  எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்திடுங்கள்.

  நயி த்தீஷாவில் எப்போதும் இணைந்திருக்க